ரமணர் மேற்கோள் 33

ரமணர் மேற்கோள் 33 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 268 பக்தர்: மெய்யான “நான்-நான்” என்னும் பரிபூரண ஆன்மா எது, ‘தான்’ என்னும் அகந்தையான நானுணர்வு எது, என்று எப்படி தெளிந்தறிந்துக் கொள்வது? ரமணர்: எழுந்து தோன்றி பின்பு வீழ்ந்து மறைவது நிலையற்ற ‘நான்’. துவக்கமும் முடிவும் இல்லாமல் உள்ளது நிலையான நிரந்தரமான “நான்-நான்” என்னும் சுய

ரமணர் மேற்கோள் 32

ரமணர் மேற்கோள் 32 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 220 பக்தர்: ஆழ்நிலை சிந்தனையை எப்படி ஆரம்பிப்பது? அதற்கு உங்கள் அருள் வேண்டும். ரமணர்: அருள் எப்போதும் இருக்கிறது.  அதிக உணர்ச்சி வசப்படாத சாந்தமான தன்மை, உண்மை அகநிலையை உணர்வது, ஆன்மாவில் உறைந்து இருப்பது, இவையெல்லாம் குருவின் அருளின்றி பெற முடியாது.  

ரமணர் மேற்கோள் 31

ரமணர் மேற்கோள் 31 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 485 தியானம் (ஆழ்நிலை சிந்தனை), பக்தி (மனமொன்றிய ஈடுபாடு), ஜபம், முதலியவை பல்வகைப்பட்ட எண்ணங்களை வெளியேற்றி வைக்க உதவும் உறுதுணைகளாகும். இதனால் ஒரே ஒரு எண்ணம் மட்டும் நிலவுகிறது; அதுவும் முடிவில் ஆன்மாவினுள் கரைந்து விடுகிறது.

ரமணர் மேற்கோள் 30

ரமணர் மேற்கோள் 30 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 485 ஒவ்வொரு முறை எண்ணங்கள் தொல்லைபடுத்தும் போதும் ஆன்மாவின் ஆழ்நிலையில் பின்வாங்குவதே அகநிலைச் சார்ந்த பயிற்சியாகும்.  அது மனதின் ஒருமுக சிந்தனையில்லை, மனதின் அழிவுமில்லை; ஆனால் ஆன்மாவினுள் பின்வாங்கிக் கொள்வது தான்.   

ரமணர் மேற்கோள் 29

ரமணர் மேற்கோள் 29 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 377 பக்தர்: மக்கள், கடவுள் மெய்யல்ல என்று நிரூபிக்க பெருங்கேடுகளை – அதாவது பூகம்பம், பஞ்சம் போன்ற பேரழிவுகளை – மேற்கோள் காட்டுகின்றனர். அவர்களது வாதத்தை எப்படி கையாளுவது? மகரிஷி: இவ்வாறு வாதாடுபவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் ? பக்தர்: அவர்கள் “இயற்கை” என்று சொல்கிறார்கள். மகரிஷி:

↓
error: Content is protected !!