13 B. ஆன்மா மட்டுமே உள்ளது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா “ஆன்ம உண்மைத் தன்னிலையை உணர குரு அவசியமா ?” என்று திருமதி பிக்கட் (ஆங்கிலேய பெண்மணி) முதலில் கேட்டார். மகரிஷி: ஆன்மாவை உணர்தல் – அறிவுரைகள், சொற்பொழிவுகள், தியானங்கள் முதலியவற்றையெல்லாம் விட அதிகமாக, முக்கியமாக ஆசானாகிய குருவின் அருளால் தான் நிகழும். இவையெல்லாம் இரண்டாம்பட்சமான உதவிகள். ஆனால், குருவின் அருள் தான் பிரதானமான, இன்றியமையாத, மிக முக்கியமான காரணம். பக்தர்.: […]
You are browsing archives for
Category: எண் வரிசைப்படி உரையாடல்கள்
ரமண மகரிஷியுடன் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் புத்தகத்தில் உள்ள எண் வரிசைப்படி இங்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உரையாடலும் எந்த விதத்திலாவது மிகுந்த உதவி அளிக்கும். தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா.
13 A. சாந்தமான குரங்கு
13 A. சாந்தமான குரங்கு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திருமதி எம். ஏ. பிக்கட், என்ற ஒரு ஆங்கிலேயப் பெண்மணி, “ரகசிய இந்தியாவில் தேடல்” என்னும் புத்தகத்தைப் படித்து விட்டு, மகரிஷியைச் சந்திக்க வந்தார். மொழி பெயர்க்க, மகரிஷியின் பக்தர் ஒருவரின் சேவை வழங்கப்பட்டது. அப்போது கூடத்தில் வருகையாளர் பலர் இருந்தனர். அவர்களில் சிறு குழந்தைகளுடன் சில பெண்டிரும் இருந்தனர். கூடத்தில் அதிக சத்தம் இருந்தது. கடைசியில் சத்தம் ஓய்ந்து, அமைதி நிலவியது. […]
12. எனக்கு ஒன்றும் தெரியாது
12. எனக்கு ஒன்றும் தெரியாது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒருவர் மகரிஷியிடம் எதாவது சொல்லும்படி கேட்டார். அவர் என்ன தெரிந்துக் கொள்ள விரும்புகிறார் என்று கேட்டபோது, அவர் தனக்கு ஒன்றுமே தெரியாதென்றும், மகரிஷியிடமிருந்து ஏதாவது கேட்க விரும்புவதாகவும் சொன்னார். ரமணர்: உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று உங்களுக்குத் தெரியும். அந்த அறிவை கண்டுப் பிடியுங்கள். அது தான் ஆன்ம விடுதலை, முக்தி. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, […]
11. தலைவிதி முடிவடையுமா
11. தலைவிதி முடிவடையுமா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: தலைவிதி கர்மம் எப்போதாவது முடிவடையுமா? ரமணர்: தலைவிதியும் கர்மங்களும் தாமே தமது முடிவின் விதைகளை வைத்துக் கொண்டு உள்ளன. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, 1935 உரையாடல் 11.
10. மனதைக் கட்டுப்படுத்தல்
10. மனதைக் கட்டுப்படுத்தல் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா வருகையாளர் ஒருவர், மகரிஷி அருளிய உள்ளது நாற்பது அனுபந்தத்தின் 8வது செய்யுளில்1 உள்ள மகரிஷியின் அறிவுரைகளின்படி, உண்மை தன்னிலையை உணர்வது எப்படி என்று கேட்டார். அவரது கஷ்டம் மனதைக் கட்டுப் படுத்துவதில் இருந்தது. மகரிஷி: மூச்சைக் கட்டுப்படுத்துவதால் மனதைக் கட்டுப்படுத்தலாம். இதை ஒருவர் தாமே வேறு உதவி ஏதுமின்றி செய்தால், மனம் கட்டுப்படும். இல்லையெனில், ஒரு உயர்வான சக்தியின் முன்னால், மனம் தானாகவே எளிதாக கட்டுப்பாட்டில் […]
9. ஞானியும் குழந்தையும்
9. ஞானியும் குழந்தையும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒருவர் கேட்டார்: மறைநூல்களில் ஏன் ஞானி ஒரு குழந்தையைப் போல என்று சொல்லியுள்ளனர்? மகரிஷி: ஒரு குழந்தையும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே மாதிரி தான். நிகழ்ச்சிகள், அவை நிகழும் சமயத்தில் மட்டுமே குழந்தைகளைக் கவரும். நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தவுடன், அவற்றில் ஒரு குழந்தைக்கு ஆர்வம் இருக்காது. இதிலிருந்து, நிகழ்ச்சிகள் குழந்தையின் மனதில் மனப்பதிவு ஒன்றும் உண்டாக்குவதில்லை என்று தெரிகிறது. அவற்றால் குழந்தையின் […]
8. புனித மந்திரங்கள்
8. புனித மந்திரங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: “தற்செயலாக கிடைத்த புனித மந்திரங்களை ஜபிப்பதால் எவராக இருந்தாலும் அவருக்கு அதன் பலன் கிடைக்குமா?” மகரிஷி: “இல்லை. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும். மகரிஷி இதை பின்வறும் கதையின் மூலம் விளக்கினார். ஒரு மன்னர் தமது மந்திரியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு மந்திரி தமது ஜபத்தில் ஈடுபட்டிருப்பதாக […]
7. மாய வித்தைகள்
7. மாய வித்தைகள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பகவானிடம் மாய தந்திர வித்தைகளைப் பற்றி, சித்திக்களைப் பற்றி, கேள்வி கேட்கப்பட்டது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் கடைசி வரிசையில் சொன்னபடி, சுய ஆன்மாவை உணர்வதின் அனந்தசக்தியுடன் (ஈஸ்வரத்துவம்), தந்திர சாதனைகள் செய்யும் சித்திக்களும் (மாய வித்தைகள் செய்யும் சக்திகள்) அடைய முடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, மகரிஷி இவ்வாறு கூறினார்: “முதலில் அனந்தசக்தி நிலை (ஈஸ்வரத்துவம்) அடையப்படட்டும். அதன் பிறகு (மாய வித்தைகள் செய்யும் […]
6. சஞ்சலப்படும் மனம்
6. சஞ்சலப்படும் மனம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு துறவி, மனதின் கவனச் சிதறலை எப்படி முன்தவிர்த்து தடுப்பது என்பதைப் பற்றி கேள்வியொன்று கேட்டார். மகரிஷி: சுய தன்மையை, ஆன்மாவை மறந்து போவதால், பொருள்களைக் காண்கிறீர்கள். தன்னிலையான ஆன்மாவை பிடித்து வைத்துக் கொண்டால், வெளிப்புற உலகத்தை (ஆன்மாவை விட்டு தனியாக) காண மாட்டீர்கள். ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, 1935 உரையாடல் 6.
5. கடலில் கரைந்த பொம்மை
5. கடலில் கரைந்த பொம்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு மோரீஸ் ப்ரீட்மன் என்ற ஒரு பொறியாளர், அருள் என்னும் விஷயத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்: “உப்பால் செய்த ஒரு பொம்மை கடலில் மூழ்கும் போது, நீர்காப்பு கொண்ட உடையால் கூட அதை பாதுகாக்க முடியாது.” இது மிக்க மகிழ்ச்சியூட்டும் உவமை என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது. மகரிஷி மேலும் உறைத்தார், “உடல் தான் நீர்காப்பு கொண்ட உடை.” ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் […]
4. படித்த இளைஞரின் கேள்வி
4. படித்த இளைஞரின் கேள்வி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா மகரிஷியை ஒரு படித்த இளைஞர் கேட்டார்: “உயிரியல் வல்லுனர்கள் இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்று நிர்ணயித்திருக்கும் போது, நீங்கள் எப்படி இதயம் வலது பக்கத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?” இளைஞர் அதிகாரப்பூர்வமான ஆதாரம் கேட்டார். மகரிஷி: ஆமாம். உடலின் இதயம் இடது பக்கத்தில் தான் உள்ளது; இதை மறுக்க முடியாது. ஆனால், நான் குறிப்பிடும் இதயம் உடல் சார்ந்த்ததில்லை. அது வலது […]
3. சந்தோஷத்தின் இயல்பு
3. சந்தோஷத்தின் இயல்பு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா சந்தோஷத்தின் இயல்பைப் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மகரிஷி: ஒருவர் தமது சந்தோஷத்திற்கு காரணம் வெளிப்புற காரணங்களும் தமது உடைமைகளும் என்று நினைத்தால், விகித சமப்படி, அவரது உடைமைப் பொருட்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரது சந்தோஷமும் அதிகரிக்கும், அவரது உடைமைப் பொருட்கள் குறைய குறைய அவரது சந்தோஷமும் குறையும் என்று முடிவு செய்வது அறிவுக்கு பொருந்தியதாகும். எனவே இதன்படி, அவருக்கு உடைமைகள் ஒன்றுமே […]