சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: எந்த விதத்தில் சந்தோஷம் நமது உண்மைத் தன்மை? மகரிஷி.: பூரண பேரானந்தம் தான் பிரம்மன் (ஆன்ம சொரூபம்). பூரண அமைதி உண்மை சொரூபத்தினுடையது தான். ‘அது’ மட்டுமே உள்ளது, உணர்கிறது. உடலுக்கு அப்பால் சார்ந்ததை மதிப்பிட்டாலும், பக்தி மார்க்கத்தில் ஊகித்து உய்த்துணர்ந்தாலும், இதே தீர்மானம் தான் அடையப்படுகிறது. நாம் பேரானந்தத்திற்காக கடவுளை வணங்கி, அருளினால் அதைப் பெறுகிறோம். பேரானந்தத்தை […]
You are browsing archives for
Category: எண் வரிசைப்படி உரையாடல்கள்
ரமண மகரிஷியுடன் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் புத்தகத்தில் உள்ள எண் வரிசைப்படி இங்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உரையாடலும் எந்த விதத்திலாவது மிகுந்த உதவி அளிக்கும். தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா.
28 C. சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமை
28 C. சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமையும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: என்னுடைய சுயேச்சையான மனத்திட்பத்திற்கும், நம்மை திணரடிக்கிற எல்லாம் வல்ல கடவுளின் சர்வ வல்லமைக்கும் என்ன உறவு? (1) கடவுளின் ‘எல்லாம் அறியும் தன்மை’, தான்மையின் சுயேச்சைக்கு இசைவானதா? (2) கடவுளின் ‘அனந்தவீரியம்’, தான்மையின் சுயேச்சைக்கு இசைவானதா? (3) இயற்கையின் விதிகள், கடவுளின் சுயேச்சைக்கு இசைவானதா? மகரிஷி.: ஆமாம். தற்காலம், ஒரு வரம்புக்குட்பட்ட மனத்திறனின் பார்வைக்கும் மனத்திட்பத்திற்கும் […]
28 B. மெய்மையின் தன்மை என்ன
28 B. மெய்மையின் தன்மை என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: மெய்மையின் தன்மை என்ன? மகரிஷி.: (1) தொடக்கமும் முடிவும் இல்லாத, சாசுவத நித்திய உள்ளமை. (2) முடிவற்ற, எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் உள்ளமை. (3) எல்லா உருவங்களுக்கும், மாறுதல்களுக்கும், சக்திகளுக்கும், பொருட்களுக்கும், ஆன்மாவிற்கும் அடிப்படையான உள்ளமை. பலவானவை மாறலாம், கடந்து செல்லலாம் (தோற்றப்பாடுகள்); ஆனால் “ஒன்று” எப்போதும் தாங்கி நிலைத்து நிற்கும் (புலன்களால் அன்றி, அக நிலையால் உணரப்படும் நிகழ்வு). (4) அறிபவர், அறியப்படும் […]
28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோ
28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதற்கும் மூச்சை ஒழுங்கு படுத்துவதற்கும் இடையே உள்ள உறவு என்ன? மகரிஷி.: (அறிவு சார்ந்த) எண்ணமும், சுவாசம், சுற்றோட்டம் முதலிய (தாவர) நடவடிக்கைகளும், ஒரே ஒன்றின் இரண்டு அம்சங்கள் – தனிப்பட்ட உயிர். இரண்டும் உயிரின் மேல் சார்ந்துள்ளன (உயிரில் உறைகின்றன). உயிர் நிலையான நடவடிக்கை போல் தனித்தன்மையும் மற்ற கருத்துக்களும் அதிலிருந்து எழுகின்றன. […]
27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது
27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: மனதைக் கட்டுப்படுத்துவதன் பயிற்சிகள் எப்படி செய்யப்படுகின்றன? மகரிஷி.: வெளிப்புற தோற்றப்பாடுகளின் மாறிக்கொண்டே இருக்கின்ற, நிலையற்ற தன்மையை ஆராய்ந்து பார்ப்பது, வைராக்கியத்திற்கு வழிவகுக்கிறது. எனவே விசாரணை தான் முதலாவதும் மிக முக்கியமானதுமான நிலைப்படியாகும். விசாரணை தானாவே தொடரும்போது, அதனால் செல்வம், புகழ், சுகம், இன்பம் போன்றவற்றின் மேல் வெறுப்பு உண்டாகிறது. “நான்” என்னும் எண்ணம் ஆராய்வதற்கு மேலும் தெளிவாகிறது. “நான்” என்பதன் மூலாதாரம், இறுதியான குறிக்கோள், இதயம் ஆகும். ஆனால், […]
26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி
மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: மனதின் தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது, மனதின் இறுதியான, அடிப்படையான காரணம், அல்லது அதன் வெளிப்பாட்டுக்கு அடிப்படையான நிலை, அதை எப்படி கண்டுபிடிப்பது? மகரிஷி: எண்ணங்களை, அவற்றின் முக்கியத்துவத்தின்படி வரிசைப்படுத்தினால், ‘நான் – எண்ணம்’ தான் எல்லாவற்றிலும் முக்கியமான எண்ணம். ஒவ்வொரு கருத்தும், எண்ணமும், ஒருவரின் எண்ணமாகவே எழுவதாலும், அது தான்மை உணர்வை விட்டு சார்பின்றி தனியாக விளங்காததாலும், ‘ஒரு மனிதரின் தனித் […]
25 B. மனம் என்பது என்ன
25 B. மனம் என்பது என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி தொடர்ந்து கேட்டார்: பக்தர்: மனமென்றால் என்ன? மகரிஷி: மனம் என்பது உயிரின் ஒரு தோற்ற வெளிப்பாடு. ஒரு கட்டையோ அல்லது ஒரு நுண்மையான இயந்திரமோ மனம் என்று அழைக்கப்பட முடியாது. முக்கிய சக்தியானது, உயிர்-செயல்பாடுகளாகவும், மனமென்று அழைக்கப்படும் உணர்வு விழிப்புள்ள […]
25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்ப
25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி கேட்டார்: “நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?” மகரிஷி.: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் (annamaya kosa) அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. இன்னும் ஆழமாகப் போகும்போது, மனமும் (manomaya kosa) அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. அடுத்த […]
24. உணர்வு தான் முக்கியம் – பகுத்தறிவு இ
24. உணர்வு தான் முக்கியம் – பகுத்தறிவு இல்லை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திருமதி பிக்கட்: நீங்கள் ஏன் பசும்பால் ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் கோழி முட்டைகள் ஏற்றுக் கொள்வதில்லை? மகரிஷி.: பழக்கப்பட்ட பசுக்கள் தமது கன்றுக்களின் தேவைக்கு மேல் பால் விளைவிக்கின்றன. எனவே அவை மிஞ்சியுள்ள பாலை விடுவிப்பதால் சுகமடைகின்றன. பக்தர்.: ஆனால் கோழிகள் முட்டைகளை வைத்துக் கொள்ள முடியாதே? மகரிஷி.: ஆனால் அவைகளில் சாத்தியமான உயிர்கள் உள்ளன. பக்தர்.: எண்ணங்கள் […]
23. குரு என்பவர் யார்
23. குரு என்பவர் யார் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எவன்ஸ் வென்ட்ஸ் இன்னொரு நாள் தொடர்ந்து கேட்டார்: “ஆன்மீக குருவென்று பல பேரை ஒருவர் ஏற்றுக் கொள்ளலாமா?” மகரிஷி.: குரு என்பவர் யார்? சொல்லப்போனால், அவர் ஆன்மா தான். மனதின் வளர்ச்சியின் நிலைப்படிகளுக்கு தகுந்தபடி, ஆன்மா வெளிப்புறத்தில் குருவாக உருக்கொள்கிறது. மிகவும் புகழ்பெற்ற புனிதர் அவதூதர், தமக்கு 24 ஆசான்கள் இருந்ததாக சொன்னார். ஒருவரிடமிருந்து யாராவது ஏதாவது கற்றுக் கொண்டால், அவர் […]
22. நல்ல தரமான உணவு
22. நல்ல தரமான உணவு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திருமதி பிக்கட் சென்னையிலிருந்து மீண்டும் வந்தார். உணவு விதிகளைப் பற்றி சில கேள்விகள் கேட்டார். பக்தர்.: ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு எந்த விதமான உணவு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன? மகரிஷி.: வரம்புக்குட்பட்ட சாத்வீகமான நல்ல தரமுள்ள உணவு. பக்தர்.: சாத்வீகமான உணவு என்ன? மகரிஷி.: ரொட்டி, பழங்கள், காய்கறிகள், பால், போன்றவை. பக்தர்.: வட இந்தியாவில் சிலர் மீன் சாப்பிடுகிறார்கள். அப்படி செய்யலாமா? மகரிஷி.: […]
21. திடமான ஞானம்
21. திடமான ஞானம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு எல்லப்பச் செட்டியார் என்னும் செல்வாக்கான இந்து, சென்னை மாநிலத்தின் சட்டமியற்றும் மன்றத்தின் உறுப்பினர் ஆவார். அவர் கேட்டார்: ‘கேட்பதனால் பிறக்கும் ஞானம் திடமில்லை; ஆனால் தியானத்தால் பிறக்கும் ஞானம் திடமானது’ – என்று ஏன் சொல்லப்படுகிறது?” மகரிஷி.: அதற்கு மாறாக, ‘கேள்விப்பட்ட (பரோக்ஷ) ஞானம் திடமில்லை; ஆனால் தனது சொந்த அனுபவத்தால் பிறக்கும் (அபரோக்ஷ) ஞானம் திடமானது’ என்று சொல்லப்படுகிறது. மேலும், கேட்டு அறிந்துக் […]