காயத்ரி மந்திரம் இந்துத்துவத்தின் ரிக் வேதத்தில் உள்ளதாகும்.

பொருள்:
எல்லாவற்றின் துவக்கம், நடுப்பகுதி, இறுதி (ஓம்),
பூமி, நடுவிடம், ஆகாயம் – இவற்றையெல்லாம் ஒளிர்விக்கும் ஒளி,1
அந்தச் சிறந்த மதிப்பிற்குரிய பூசைக்குரிய கதிரவனை நான் வணங்குகிறேன்.
அந்த சுயமாக ஒளிரும், ஒளி மயமான, தெய்வீக சோதி  
என் மனதில் சரியான திசையில் ஊக்கமும் ஒளியும் ஏற்படுத்த வேண்டுகிறேன்.  

1 இவை முறையே விழிப்பு, கனவு, ஆழந்த தூக்கம் என்ற நிலைப்பாடுகளை குறிக்கின்றன.

தேவநாகரியில் இந்த மந்திரம்:
ॐ भूर्भुवः स्वः ।
तत्स॑वि॒तुर्वरेण्यं॒
भर्गो॑ दे॒वस्य॑ धीमहि ।
धियो॒ यो नः॑ प्रचो॒दया॑त् ॥

ஓம் பூர் புவர் ஸ்வஹ:
தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன ப்ரோசதயாத் 
– ரிக் வேதம் (மண்டலம் 3.62.10)

காயத்ரி
↓
error: Content is protected !!