Nature of perception
3. சந்தோஷத்தின் இயல்பு
1. நிலையற்று உலவும் துறவி

புலன்காட்சிகளின் இயல்பு

ஒருவர் புறப்பார்வையின் இயல்பைப் பற்றி கேட்டார்.

மகரிஷி: ஒருவர் எந்த நிலையில் இருக்கிறாரோ, புலன்காட்சிகள் அந்த நிலையைச் சார்ந்து அமைகின்றன. அதன் விளக்கம் என்னவென்றால், விழித்திருக்கும் நிலையில், ஊன உடல் ஜடப் பொருட்களின் பெயர்களையும் வடிவங்களையும் பார்க்கிறது; கனவு நிலையில், மன உடல், மனதின் படைப்புகளை அவற்றின் பலவிதமான பெயர்களிலும் வடிவங்களிலும் காண்கிறது; ஆழ்ந்த உறக்கத்தில், உடல் உணர்வில்லாததால், காட்சிகள் ஒன்றும் இருப்பதில்லை; அதே போல், இவற்றையெல்லாம் கடந்த ஆழ்நிலையில், ஆன்மாவுடன் ஒன்றிய நிலை, மனிதரை எல்லாவற்றுடனும் இசைந்து இணைந்து இருக்க வைக்கிறது; மேலும் அவரது  தன்னிலையை விட்டு அகன்று தனியாக எதுவுமே இருப்பதில்லை.

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 2.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

3. சந்தோஷத்தின் இயல்பு
1. நிலையற்று உலவும் துறவி
2. புலன்காட்சிகளின் இயல்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!