Nature of happiness
4. படித்த இளைஞரின் கேள்வி
2. புலன்காட்சிகளின் இயல்பு

சந்தோஷத்தின் இயல்பு

சந்தோஷத்தின் இயல்பைப் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

மகரிஷி:

ஒருவர் தமது சந்தோஷத்திற்கு காரணம் வெளிப்புற காரணங்களும் தமது உடைமைகளும் என்று நினைத்தால், விகித சமப்படி, அவரது உடைமைப் பொருட்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரது சந்தோஷமும் அதிகரிக்கும், அவரது உடைமைப் பொருட்கள் குறைய குறைய அவரது சந்தோஷமும் குறையும் என்று முடிவு செய்வது அறிவுக்கு பொருந்தியதாகும். எனவே இதன்படி, அவருக்கு உடைமைகள் ஒன்றுமே இல்லாவிட்டால், அவருக்கு சந்தோஷமும் அறவே இருக்கக் கூடாது. ஆனால், மனிதரின் உண்மையான அனுபவம் என்ன? அது இந்த எண்ணத்துடன் ஒப்புகிறதா?

ஆழந்த தூக்கத்தில், தமது உடல் உள்பட, மனிதர் உடைமைகளே இல்லாமல் இருக்கிறார். வருந்துவதற்கு பதிலாக, அவர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். எல்லோரும் நன்றாக தூங்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இதன் முடிவு என்னவென்றால், சந்தோஷம் மனிதரின் இயல்பான உள்ளார்ந்த தன்மை; அது வெளிப்புற காரணங்களால் ஏற்படுவதில்லை. தமது கலப்படமற்ற, மாசில்லாத இன்பத்தை உணர ஒருவர் தமது ஆழ்நிலையை, தந்நிலையை அறிய வேண்டும்.

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 3.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

4. படித்த இளைஞரின் கேள்வி
2. புலன்காட்சிகளின் இயல்பு
3. சந்தோஷத்தின் இயல்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!