ரமண கீதை - அத்தியாயம் 4 - ஞானத்தின் தன்மை
ரமண கீதை - அத்தியாயம் 3 - மிக உயர்ந்த கடமை

ரமண கீதை – அத்தியாயம் 4 – ஞானத்தின் தன்மை

 

திரு ரமண கீதை – அத்தியாயம் 3

~~~~~~~~

வரிசை 1, 2

ஞானியர்களில் எல்லாம் சிறந்தவரே, இந்த பின்வரும் தியானங்களில் எதை “ஞானம்” என்று சொல்லலாம்.  “நான் பிரம்மன்”, “பிரம்மன் தான் நான்”, “நான் எல்லாமே தான்”, “இவை எல்லாமே பிரம்மன் தான்”. அல்லது அது இந்த நான்கு கருத்துக்களிலிருந்தும் வேறுபட்டதா?

வரிசை 3

பகவா ரமண முனி, எனது ஆசானும் குருவும் ஆனவர், கருணையுடன் இந்த கேள்வியை கேட்டுக் கொண்டு விட்டு, பிறகு இவ்வாறு பதிலளித்தார். 

வரிசை 4

இந்த தியானங்கள் எல்லாம் வெறும் கருத்துக்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை. சான்றோரின்படி, ஒருவர் தமது சொந்த தூய தன்மையில் உறைந்து விளங்குவது தான் “ஞானம்”. 

வரிசை 5

குருவின் இந்த சந்தேகத்தை நீக்கும் பதிலைக் கேட்டுக் கொண்ட பின், நான் அவரிடம் இன்னொரு பிரச்சனையைப் பற்றி கேட்டேன்.

வரிசை 6

ஞானியர்களின் கடவுளே, பிரம்மனை எண்ணத்தால் புரிந்துக் கொள்ள முடியுமா? தயவுசெய்து என் மனதில் எழும் இந்த சந்தேகத்தை அகற்ற வேண்டும்.  

வரிசை 7

இந்த கேள்வியை கேட்டு விட்டு, தம்மிடம் சரணடைந்தவருக்கெல்லாம் நண்பரானவர், தமது பார்வையின் கருணையை என் மீது பொழிந்து,    இவ்வாறு பேசினார்.

வரிசை 8 

தனது சொரூபமாக விளங்கும் பிரம்மனை, ஒரு எண்ணம் புரிந்துக் கொள்ள நாடினால், அது தனது தனிப்பட்ட தனித்துவத்தை இழந்து, பிரம்மனாகவே  ஆகிவிடுகிறது.

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா

 

திரு ரமண கீதை
சமஸ்கிருதத்தில் பகவத் கீதையில் உருப் படிவத்தில் பதிவு செய்தது : திரு கணபதி முனி
கேள்விகள் கேட்டவர்கள் : திரு ரமண மகரிஷியின் மேன்மையான சீடர்கள்
சமஸ்கிருதத்தில் விளக்கவுரை : திரு கபாலி சாஸ்திரியார்
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு : திரு ஏ. நடராஜன்

 

 

ரமண கீதை - அத்தியாயம் 3 - மிக உயர்ந்த கடமை

ரமண கீதை – அத்தியாயம் 4 – ஞானத்தின் தன்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!