ரமண கீதை - அத்தியாயம் 3 - மிக உயர்ந்த கடமை
ரமண கீதை - அத்தியாயம் 4 - ஞானத்தின் தன்மை
ரமண கீதை - அத்தியாயம் 2 - மூன்று பாதைகள்

ரமண கீதை – அத்தியாயம் 3 – மிக உயர்ந்த கடமை

Ramana Gita – Chapter 3 – The Paramount Duty

 

திரு ரமண கீதை – அத்தியாயம் 3

Sri Ramana Gita – Chapter 3

~~~~~~~~

வரிசை 1: விவேகமுள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக, தைவராதருக்கும் ஆசாரியர் ரமணருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் இந்த அத்தியாயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

Verse 1: For the delight of the wise, the conversation between Daivarata and Acharya Ramana is recorded in this chapter.

~~~~~~~~

வரிசை 2: (கேள்வி) பகவான், பிறப்பு இறப்பு இவற்றின் சுழற்சியில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதரின் மிக உயர்ந்த கடமை என்ன? தயவு செய்து ஒன்றை முடிவு செய்து, எனக்கு விவரித்து உரைக்க வேண்டும்.  

Verse 2: (Question) “Bhagavan, what is the paramount duty of a human being caught up in the cycle of births and deaths? Please decide on one, and expound it to me.”

~~~~~~~~

வரிசை 3:  பகவான் பதிலளித்தார், “மிகவும் உயர்ந்ததை விரும்புவோருக்கு, தமது மெய்யான தன்மையை கண்டு பிடிப்பது தான் மிகவும் முக்கியமாகும். அது தான் எல்லா செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் அடிப்படையாகும்.

Verse 3: Bhagavan replied, “For those desiring the highest, discovering one’s own true nature is most important. It is the basis of all actions and their results.”

~~~~~~~~

வரிசை 4: (கேள்வி) சுருக்கமாக, எந்த ஆன்மீக பயிற்சியின் மூலமாக ஒருவர் தமது மெய்யான தன்மையை உணர முடியும்?

Verse 4: (Question) “Briefly, by what spiritual practice does one become aware of one’s own true nature? What effort brings about the exalted inner vision?”

~~~~~~~~

வரிசை 5, 6: (பதில்)
“புலன் சார்ந்த பொருட்களிலிருந்து எல்லா எண்ணங்களையும் எத்தனத்தின் மூலமாக பின்வாங்கிவிட்டு, வெளிப்புற பொருட்களைப் பற்றி இல்லாத நிலையான சுய விசாரணையில் ஒருவர் பொருந்தி இருக்க வேண்டும்.”
“சுருக்கமாக, ஒருவர் தமது சொந்த தன்மையை அறிந்துக் கொள்ள இது தான் பயிற்சியாகும். இந்த எத்தனம் மட்டுமே மேன்மை மிகுந்த உட்புற தரிசனத்தைக் கொண்டு வரும்.”

Verse 5 and 6: (Answer) 
“Withdrawing all thoughts from sense objects through effort, one should remain fixed in steady non-objective enquiry.”
“This, in brief, is the practice for knowing one’s own nature. This effort alone brings about the exalted inner vision.”

~~~~~~~~

வரிசை 7: (கேள்வி) ஞானியர்களில் எல்லாம் மிகச் சிறந்த ஞானியே, மறை நூல்களில் நிர்ணயித்துக் குறிப்பிட்டுள்ள நடத்தை விதித் தொகுப்பைக் கடைப்பிடிப்பது, வெற்றியை சாதிக்கும் வரையில் தொடர்ந்து உதவி அளிக்குமா?

Verse 7 : (Question) “Best of sages, will the observance of the code of conduct prescribed in the Scriptures continue to be helpful till success is achieved?”

~~~~~~~~

வரிசை 8: (பதில்) நிர்ணயித்து அளிக்கப்பட்டுள்ள நடத்தை விதிகள், தீவிரமாக உள்ள ஆன்மீகர்களின் எத்தனத்திற்கு உதவி அளிக்கத்தான் செய்யும். செய்ய வேண்டியது செய்யக் கூடாதது எல்லாம், சாதனையில் வெற்றி அடைந்தவர்களுக்கு தாமாகவே  விழுந்து விடும். 

Verse 8 : (Answer) “Prescribed rules of conduct do help the effort of earnest seekers. The do’s and dont’s drop off by themselves for those who have attained success.”

~~~~~~~~

வரிசை 9: (கேள்வி) வெளிப்புற பொருட்களைப் பற்றி இல்லாத நிலையான சுய விசாரணையில் பொருந்தி இருப்பதால் ஒருவருக்கு கிடைக்கும் வெற்றி என்னவோ அதே அளவு வெற்றியை, புனிதமான மந்திரங்களை ஜபிப்பதால் அடைய முடியாதா?

Verse 9 : (Question) “Cannot success be obtained by repetition of sacred syllables to the same extent as by exclusive, steady non-objective self-enquiry?”

~~~~~~~~

வரிசை 10, 11: (பதில்) 
“நிதானமான மனதுடன், இடைவிடாமல், புனிதமான மந்திரங்கள், அல்லது “ஓம்” என்ற மந்திரம், இவற்றை ஜபிக்கும் தீவிரமான ஆன்மீகர்கள் வெற்றி அடைவார்கள்.”
“புனிதமான மந்திரங்கள் அல்லது தூய “ஓம்” என்னும் மந்திரம், இவற்றை ஜபிப்பதால், மனம் புலன் சார்ந்த பொருட்களிலிருந்து பின்வாங்கி, ஆன்மாவுடன் ஒன்று சேர்ந்து விடுகிறது.”

Verse 10 and 11 : (Answer)
Earnest seekers who, incessantly and with a steady mind, repeat sacred syllables or ‘OM’, will attain success.”
“By repetition of the secret syllables or the pure ‘OM’, the mind is withdrawn from sense objects and becomes one with the Self.”

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா

 

திரு ரமண கீதை
சமஸ்கிருதத்தில் பகவத் கீதையில் உருப் படிவத்தில் பதிவு செய்தது : திரு கணபதி முனி
கேள்விகள் கேட்டவர்கள் : திரு ரமண மகரிஷியின் மேன்மையான சீடர்கள்
சமஸ்கிருதத்தில் விளக்கவுரை : திரு கபாலி சாஸ்திரியார்
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு : திரு ஏ. நடராஜன்

 

 

ரமண கீதை - அத்தியாயம் 4 - ஞானத்தின் தன்மை
ரமண கீதை - அத்தியாயம் 2 - மூன்று பாதைகள்

ரமண கீதை – அத்தியாயம் 3 – மிக உயர்ந்த கடமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!