ரமண கீதை - அத்தியாயம் 2 - மூன்று பாதைகள்
ரமண கீதை - அத்தியாயம் 3 - மிக உயர்ந்த கடமை
ரமண கீதை - அத்தியாயம் 1 - சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம்

ரமண கீதை – அத்தியாயம் 2 – மூன்று பாதைகள்

Ramana Gita – Chapter 2 – The Three Paths

 

திரு ரமண கீதை – அத்தியாயம் 2

Sri Ramana Gita – Chapter 2

~~~~~~~~

வரிசை 1:  1915வது வருடத்தின் மழை காலத்தில், பகவான் ரமண ரிஷி ஒரு கவிதை வரிசையின் மூலமாக தமது அறிவுரைகளின் சாராம்சத்தை அறிவித்தார்.   

Verse 1: In the rainy season of 1915, Bhagavan Ramana Rishi stated the essence of his teachings by a verse.

~~~~~~~~

வரிசை 2: இதயக் குகையின் மத்தியில், பரப்பிரம்மம் தன்னந்தனியாக பிரகாசிக்கிறது. அது நேரடியாக “நான் – நான்” என்ற விதத்தில் அனுபவிக்கப்படும் ஆன்ம சொருபமாகும். சுய விசாரணையினால், அல்லது இதயத்தில் ஒன்று சேருவதனால், அல்லது மூச்சுக் கட்டுப்பாட்டினால், இதயத்தினுள் நுழையுங்கள். நுழைந்து “அதுவாகவே” ஊன்றி விடுங்கள்.

Verse 2 : In the centre of the Heart-cave, Brahman shines alone. It is the form of Self experienced directly as – “I – I”. Enter the Heart, through self-enquiry or merging or by breath-control and become rooted as That.

~~~~~~~~

வரிசை 3:  பகவான் மகரிஷியால் உறைக்கப்பட்ட, வேதாந்தத்தின் சாராம்சத்தைக் கொண்டுள்ள,  இந்த வரிசையைப் புரிந்துக் கொண்ட எவரும், எப்போதும் எந்த சந்தேகங்களாலும் தொல்லைப் படுத்தப்பட  மாட்டார்கள்.

Verse 3 : Whoever understands this verse, uttered by Bhagavan Maharshi, containing the essence of Vedanta, will never again be assailed by doubts at any time.

~~~~~~~~

வரிசை 4: வரிசையின் முதல் பாதியில், பகவான், ஐந்து தனிமங்களால் அமைக்கப்பட்டு கண்ணுக்குத் தெரியும் உடலில், ஆன்மா உள்ள இடத்தைக் குறிப்பிடுகிறார்.

Verse 4: In the first half of the verse, Bhagavan has indicated the location of the Self within this visible body, formed of five elements.

~~~~~~~~

வரிசை 5: வரிசையின் முதல் பாதியிலேயே ஆன்ம ஞானத்தின் அனுபவத்தின் தன்மை அளிக்கப்பட்டுள்ளது; கடவுளிலிருந்து வேறாக இருப்பது மறுக்கப் படுகிறது; நேரடியான அனுபவம் வலியுறுத்தப் படுகிறது; ஆன்மாவை வர்ணிக்கும் பண்புகள் அநாவசியமாக்கப் படுகின்றன.

Verse 5: In the first half of the verse itself the nature of experience of Self-knowledge is set out, difference from God is denied, direct experience is affirmed, rendering descriptive attributes of the Self superfluous.

~~~~~~~~

வரிசை 6: வரிசையின் இரண்டாவது பாதியில், ஒரு சீடருக்கு, அவரது பயிற்சிக்காக, ஒரே சாராம்சத்தைக் கொண்ட மூன்று வித வழிமுறைகள் அளிக்கப் பட்டுள்ளன.

Verse 6: In the second half of the verse, instruction is given for the practice, by a disciple, of the three different methods which in essence are one.

~~~~~~~~

வரிசை 7: மூன்று பாதைகள் என்னவென்றால், சுய விசாரணை, இதயத்தில் ஒன்று சேர்வது, மூச்சுக் கட்டுப்பாடு. 

Verse 7: The three paths are self-enquiry, merging in the Heart, and regulation of breath.

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா

 

திரு ரமண கீதை
சமஸ்கிருதத்தில் பகவத் கீதையில் உருப் படிவத்தில் பதிவு செய்தது : திரு கணபதி முனி
கேள்விகள் கேட்டவர்கள் : திரு ரமண மகரிஷியின் மேன்மையான சீடர்கள்
சமஸ்கிருதத்தில் விளக்கவுரை : திரு கபாலி சாஸ்திரியார்
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு : திரு ஏ. நடராஜன்

 

 

ரமண கீதை - அத்தியாயம் 3 - மிக உயர்ந்த கடமை
ரமண கீதை - அத்தியாயம் 1 - சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம்

ரமண கீதை – அத்தியாயம் 2 – மூன்று பாதைகள்

2 thoughts on “ரமண கீதை – அத்தியாயம் 2 – மூன்று பாதைகள்

  • November 18, 2018 at 2:58 am
    Permalink

    Thanks for your post. It is very useful in my search and travel towards atmagnanam.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!