Sri Ramana Gita
ரமண கீதை - அத்தியாயம் 2 - மூன்று பாதைகள்
திரு ரமண கீதை - அறிமுகம்

ரமண கீதை – அத்தியாயம் 1 – சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம்

Ramana Gita – Chapter 1 – Importance of Self-Abidance

 

திரு ரமண கீதை – அத்தியாயம் 1

Sri Ramana Gita – Chapter 1

 

கணபதி முனி:

Ganapathi Muni

~~~~~~~~

வரிசை 1:  மனித உருவில் உள்ள கார்த்திகேய கடவுளான மகரிஷி ரமணருக்கு எனது வணக்கங்களை அளித்தவாறு, நான் அவரது அறிவுரைகளை இந்த தெளிவான படைப்பில் அளிக்கிறேன்.    

Verse 1: Offering my salutations to Maharshi Ramana, Kartikeya (God) in human form, I present His teachings in this lucid work.

~~~~~~~~

வரிசைகள் 2 – 3: குளிர் காலத்தில், கிருஸ்துவ சகாப்தத்தின் 1913வது வருஷம், டிஸம்பர் மாதம், 29ம் தேதியன்று, எல்லா சீடர்களும் ஒருமுக கவனத்துடன் சுற்றிலும் உட்கார்ந்திருந்த போது, பகவான் மகரிஷியிடம் நான் உறுதியான தீரமானங்களைக் கேட்டேன்.

Verses 2 and 3: In the cold season, on 29th December, 1913 of the Christian era, when all disciples sat around with focussed mind, I asked Him, Bhagavan Maharshi, for definite conclusions.

~~~~~~~~

வரிசை 4: “மெய்யானதுக்கும்” “மெய்யில்லாததுக்கும்” இடையில் உள்ள பாகுபாட்டை ஆய்ந்து அறிவது மட்டுமே முக்தி அளிக்குமா? அல்லது அதற்காக வேறு ஏதாவது ஆன்மீகப் பயிற்சி இருக்கிறதா?

Verse 4: Will the discrimination between the “Real” and the “Unreal” itself be enough to liberate? Or is there any other spiritual practice for it?

~~~~~~~~

வரிசை 5: உண்மையை நாடுபவர்களுக்கு, முக்திக்காக மறை நூல்களை நுண்மையாக ஆய்ந்து படிப்பது மட்டுமே போதுமா? அல்லது குருவின் வழிகாட்டுதலின்படி செய்யும் ஆன்மீக பயிற்சியும் தேவையா?

Verse 5: For seekers of truth, is the critical study of the scriptures alone enough for liberation? Or is spiritual practice in accordance with Guru’s guidance also necessary?

~~~~~~~~

வரிசை 6: “நிலையான ஞானம்” உள்ள ஒரு மனிதர், அவ்வாறு தாம் இருப்பதை எப்படி அறிவது?  அவருக்கு தமது ஞானத்தின் முழுமையின் உணர்வு இருப்பதால் அவர் அதை அறிகிறாரா? அல்லது வெளிப்புறத்தின் உணர்வு முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதால் அதை அறிகிறாரா?

Verse 6: How does a person of “steady knowledge” know that he is one such? Is it because of the awareness of the fullness of his knowledge? Or is it because of cessation of objective awareness?

~~~~~~~~

வரிசை 7:
1) எந்த அடையாள முத்திரையால் ஞானியர் ஆன்மாவை கண்டுகொள்கின்றனர்? 
2) இதயம் அல்லது உள்ளத்தில் முழு உணர்வுடன் மனதை உள்ளிழுத்துக் கொள்ளும் சமாதி என்பது, ஞானத்தை மட்டும் விளைவிக்குமா? அல்லது அது ஆசைகளையும் பூர்த்தி செய்யுமா?

Verse 7:
a) By what hallmark do the learned recognize the Knower?
b) Does Samadhi, the conscious absorption of the mind in the Heart, result only in knowledge, or does it also fulfill desires?

~~~~~~~~

வரிசை 8: ஒரு ஆசை நிறைவேறுவதற்காக ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடும் ஒருவர், ஆன்மாவை நிலையாக அறிந்துக் கொள்பவராக ஆகி விட்டால்,  அந்த ஆசையும் கூடவே நிறைவேறுமா இல்லையா?  

Verse 8: If one practising yoga (spiritual practices) for fulfilling a desire becomes a steadfast knower of the Self, will that desire be fulfilled anyway, or not?

~~~~~~~~

வரிசை 9: என் கேள்விகளையெல்லாம் கேட்டுக் கொண்டபின், கருணைக் களஞ்சியம், என் குரு பகவான் திரு ரமண மகரிஷி, சந்தேகங்களையெல்லாம் அகற்றுபவர், பின்வருமாறு பதிலளித்தார். 

Verse 9: After hearing my questions, my Guru – the repository of mercy, Bhagavan Sri Ramana Maharshi, dispeller of doubts – replied thus.

~~~~~~~~

திரு ரமண மகரிஷி:

Sri Ramana Maharshi:

~~~~~~~~

வரிசை 10: ஆன்மாவில் தங்கி உறைவது மட்டுமே ஒருவருக்கு எல்லா பிணப்பிலிருந்தும் முக்தி தர முடியும். ஆனால், “மெய்யானதுக்கும்” “மெய்யில்லாததுக்கும்” இடையில் உள்ள பாகுபாட்டை ஆய்ந்து அறிவது, நிலையற்றதன் மேல் வெறுப்பு அல்லது நாட்டமின்மை ஏற்பட வழிகாட்டும்.

Verse 10: Self-abidance alone can release one from all bondage. However, the discrimination between the “Real” and the “Unreal” leads to distaste for the transient.

~~~~~~~~

வரிசை 11: ஆழந்த ஞானி எப்போதும் ஆன்ம சுய சொரூபத்திலேயே வேறூன்றி இருக்கிறர். அவர் பிரபஞ்சத்தை “மெய்யில்லாதது” என்று நினைப்பதில்லை; அவர் அதை தம்மை விட்டு அகன்று இருப்பதாகவும் காண்பதில்லை. 

Verse 11: The profound Jnani is always rooted in the Self alone. He does not think of the universe as “Unreal” nor does he see it as apart from Himself.

~~~~~~~~

வரிசை 12: மெய்மையை நாடும் ஒருவருக்கு, மறை நூல்களை நுண்மையாக ஆய்ந்து படிப்பது மட்டுமே முக்தி அளிக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை. ஆன்மீக பயற்சி, “உபாசனை” இல்லாமல், ஆன்ம ஞானம் அடைய முடியாது. இது நிச்சயம். 

Verse 12: There is no doubt that mere critical study of scriptures cannot liberate the one seeking the Truth. Without “Upasana” – spiritual practice – there cannot be attainment of Self-Realization. This is certain.

~~~~~~~~

வரிசை 13: ஆன்மீக பயற்சியின் போது இயல்பான சுய தன்மையை உணருவதற்குப் பெயர் “உபாசனையாகும்”.  அதுவே தடுமாற்றமில்லாமல் நிலையாக அடையப் படும் போது, “ஞானம்” என்று அழைக்கப் படுகிறது.

Verse 13: Experience of the natural state during spiritual practice is called “Upasana” (Worship or Spiritual Practice). When that itself is unwaveringly attained, it is called “Knowledge”.

~~~~~~~~

வரிசை 14: புலன்களால் உணரும் எல்லா பொருட்களையும் முற்றிலும் விலக்கித் தள்ளிய பின், ஒருவர் தமது சொந்த சுய சொரூப தன்மையில் ஞானச் சுடராக உறைந்து விளங்குவதே “இயல்பான தன்மை” என்று சொல்லப்படுகிறது. 

Verse 14: One’s abidance in one’s own nature as a flame of knowledge, after completely discarding sense objects, is termed the “natural state”.

~~~~~~~~

வரிசை 15: திடமான இயல்பான தன்மையில், பூர்வ மனப்போக்குகள் ஏதும் இல்லாத மன மௌனத்தின் மூலம், ஞானி தம்மை அவ்வாறு ஒரு சந்தேகமும் இல்லாமல் உணருகிறார்.  

Verse 15: In the firm natural state, through the silence of the mind that is free of all tendencies, the knower knows himself as such, without any doubt.

~~~~~~~~

வரிசை 16: எல்லா படைப்புக்கும் சமத்துவம் இருக்கும் அடையாள முத்திரையினால், ஒருவர் தாம் ஒரு ஞானி என்று அறியட்டும். 

Verse 16: Let one know that he is the Knower, by his hallmark of equality for all creation.

~~~~~~~~

வரிசை 17: மனதை இதயத்தில் உள்ளிழுத்துக் கொள்ளும் பயிற்சி, ஒரு ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தொடங்கினாலும், மனம் உள்ளத்தில் அடங்குவதுடன், ஆசையும் பூர்த்தியாகும்.   

Verse 17: Even though the practice of absorption of the mind in the Heart is begun for fulfilling a desire, along with the absorption of the mind, that desire also will certainly be fruitful.

~~~~~~~~

வரிசை 18: ஒரு ஆசையுடன் ஆன்மீக யோகம் செய்யும் போது, ஒருவர் நிலையான ஞானம் உள்ள மனிதராக ஆகி விட்டால், ஆசை நிறைவேறினாலும், மன எழுச்சி ஏதும் இருக்காது.

Verse 18: While practising yoga (spiritual practices) with a desire, if one becomes a person of steady wisdom, even though the desire is fulfilled, there would be no elation.

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா

 

திரு ரமண கீதை
சமஸ்கிருதத்தில் பகவத் கீதையில் உருப் படிவத்தில் பதிவு செய்தது : திரு கணபதி முனி
கேள்விகள் கேட்டவர்கள் : திரு ரமண மகரிஷியின் மேன்மையான சீடர்கள்
சமஸ்கிருதத்தில் விளக்கவுரை : திரு கபாலி சாஸ்திரியார்
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு : திரு ஏ. நடராஜன்

 

 

ரமண கீதை - அத்தியாயம் 2 - மூன்று பாதைகள்
திரு ரமண கீதை - அறிமுகம்

ரமண கீதை – அத்தியாயம் 1 – சுய சொரூபத்தில் உறைதலின் முக்கியத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!